திருவனந்தபுரம், அக்டோபர் 18 : கேரளாவில் (Kerala) இரண்டு இளைஞர்கள் இணைந்து பேராசிரியருக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர்களுக்கு பேராசிரியர் ஒருவர் கொண்டாடட்ட நிகழ்ச்சி ஒன்றின்போது அறிமுகமான நிலையில், அந்த இரண்டு இளைஞர்களும் இணைந்து திட்டமிட்டு இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். இந்த நிலையில், பேராசிரியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பேராசிரியரை திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்கேரள மாநிலம், மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரோஸ். 28 வயதான இவருக்கு கோட்டம் மாவட்டத்தை சேர்ந்த 27 வயது மார்க் ஆண்டனி என்ற நண்பரும் உள்ளார். இவர்கள் இருவரும் நிகழிச்சி ஒன்றில் கல்லூரி பேராசிரியர் ஒருவரை சந்தித்துள்ளனர். இந்த நிலையில், இரண்டு இளைஞர்களும் பேராசிரியரை பாலியல் வன்கொடுமை செய்வதற்காக திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஆசிரியரை கொச்சிக்கு வரவழைத்த அவர்கள் அவருக்கு கஞ்சா, உயர் ரக போதைப் பொருட்கள் ஆகியவற்றை கட்டாயப்படுத்தி கொடுத்துள்ளனர். அதன் பிறகு பேராசிரியரை அவர்கள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையும் படிங்க : ஒரு மருத்துவரின் 8 வருட போராட்டம்.. இனி உணவுப்பொருட்களில் ORS என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது
காவல் நிலையத்தில் புகார் அளித்த பேராசிரியர்இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பேராசிரியர் களமச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, கொண்டாட்ட நிகழ்சியில் அறிமுகமான பேராசிரியரை கொச்சிக்கு வரவழைத்து அந்த இரண்டு இளைஞர்களும் போதைப்பொருள் கொடுத்துள்ளனர். பேராசிரியர் மயங்கிய நிலையில், அவரை அந்த இரண்டு இளைஞர்களும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையும் படிங்க : குழந்தைக்கு கொடுக்கப்பட்ட மருந்தில் நெளிந்த புழுக்கள்.. மபியில் அதிர்ச்சி சம்பவம்!
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், அந்த இரண்டு இளைஞர்களையும் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பேராசிரியரை போலீசார் களமச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொண்டாட்ட நிகழ்ச்சியில் அறிமுகமான பேராசிரியரை இளைஞர்கள் திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.