கோல்ட்ரிப் மருந்து விவகாரம்! மத்திய அரசீன் அலட்சியமே காரணம்! - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!
WEBDUNIA TAMIL October 19, 2025 01:48 AM

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் “மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்துக்கு முதல் குழந்தை உயிரிழந்து சுமார் 25 நாட்களுக்கு பிறகுதான் தமிழ்நாட்டிற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தகவல் கிடைத்த 48 மணி நேரத்திற்குள் அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, அந்நிறுவன தயாரிப்பான 126 மருந்துகளும் தடை செய்யப்பட்டது.

ஒவ்வொரு மருந்து நிறுவனத்திலும் மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டாய்வு செய்ய வேண்டும் என்ற விதிகள் உள்ளது. ஆனால் கடந்த 2011 முதலாக ஒருமுறை கூட கோல்ட்ரிப் நிறுவனத்தில் மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை.

2019 முதல் 2023 வரை 5 முறை தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்து அபராதம், உற்பத்தி நிறுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த ஆண்டில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.