குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது . மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிக்கரைகளுக்கு யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று பகலிலும் விடாது பெய்த மழையால் மெயின் அருவியின் பாதுகாப்பு வளைவு தெரியாதவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பழைய குற்றாலம் அருவியில் அனைத்து கிளைகளும் மறையும் அளவு தண்ணீர் கொட்டியது. மேலும் அங்கு நடைபாதைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நீர்நிலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்மழையால் விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்