கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதியன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் மற்றும் நடிகர் விஜய் அவர்களின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் சிக்கி 41 பேர் பலியாகியுள்ளதோடு, 100 பேர் வரை காயமடைந்து சிசிக்கை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நாட்டை உலுக்கிய இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரில், 39 குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட தலா ரூ. 20 லட்சம் நிவாரணத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை (RTGS) மூலம் செலுத்தப்பட்டு வரவு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறந்தவர்களின் 39 குடும்பத்தினருக்காக மொத்தம் ரூ. 7.8 கோடி செலவிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள 02 பேரின் குடும்பத்தினரில் யாருக்கு தொகை வழங்குவது என்பதில் சிக்கல் உள்ளதால் இன்னும் செலுத்தப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.