தேர்வுகளை ஒத்தி வைக்க முதல்வர் உயிரிழந்தார் என வதந்தி பரப்பிய கல்லூரி மாணவர்கள்!
Dinamaalai October 19, 2025 05:48 PM

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கல்லூரியில் தேர்வுகளை ஒத்திவைப்பதற்காக, முதல்வர் இறந்துவிட்டதாக போலி தகவல் பரப்பிய இரு பி.சி.ஏ மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கல்லூரியின் லெட்டர்பேட்டை போலியாக உருவாக்கி, அதில் முதல்வர் மரணமடைந்ததால் தேர்வுகள் மற்றும் வகுப்புகள் ஒத்திவைக்கப்பட்டதாக எழுதினர்.

அந்த அறிவிப்பை வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்த அவர்கள், மாணவர்களை தவறாக நம்பவைத்தனர். இதனை உண்மையென நம்பிய பலர் முதல்வரின் இல்லத்துக்கே சென்று துக்கம் தெரிவித்தனர். பின்னர் உண்மை வெளிவந்ததும் கல்லூரி நிர்வாகம் புகார் அளிக்க, போலீசார் மாணவர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுகளைத் தவிர்க்கும் நோக்கில் இப்படியான போலி தகவலை பரப்பிய மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளன

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.