"பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழிக்கிறது; நாங்களும் கைகுலுக்க மாட்டோம்" ஆப்கான் முன்னாள் கேப்டன் கரீம் சாதிக்
Dinamaalai October 19, 2025 07:48 PM

ஆப்கானிஸ்தானின் இளம் கிரிக்கெட் வீரர்கள் மீது நடந்த பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலுக்கு எதிராக, அந்த நாட்டின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கரீம் சாதிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கத்தார் மற்றும் சவுதி அரேபியாவின் தலையீட்டின் பேரில் பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் இடையே 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதைக் கடந்து பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியாகி, 12 பேர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆவேசம் தெரிவித்த கரீம் சாதிக் கூறுகையில், “எங்கள் வீரர்கள் அனைவரும் ஏழை குடும்பங்களில் இருந்து வருகிறார்கள். அவர்களைக் குறிவைத்து கொல்வது பாகிஸ்தானின் கோழைத்தனமான செயல். கிரிக்கெட் என்பது மக்களை ஒன்றிணைக்கும் விளையாட்டு. ஆனால் பாகிஸ்தான் அதை அழிக்க முயற்சிக்கிறது. இதனால் எங்கள் உற்சாகம் குறையாது. இந்தியா போல நாங்களும் இனி பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மாட்டோம்,” எனத் தெரிவித்தார். இந்த கருத்துகள் தற்போது ஆப்கான் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.