தீவிரமடையும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..சென்னை தப்புமா?
Seithipunal Tamil October 19, 2025 10:48 PM

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 24-ந்தேதி வங்கக்கடலில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்த தாழ்வுப் பகுதி, முன்கூட்டியே 21-ந்தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகக் கூடும் என  வானிலை ஆய்வு மையத்தால் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டிருந்தது. அதன்பிறகு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்லும் என வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவுப் பகுதியில் கேரள-கர்நாடக கடற்கரையில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த மழை சென்னையில் அதிகம் பெய்தால் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழ்நாட்டில் நிச்சயம் மழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. . கடலோர மாவட்டங்களில் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகம் என்றே சொல்லப்படுகிறது. இது வடகிழக்கு பருவமழையை மேலும் தீவிரப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.