சர்ச்சை கருத்து..சீமான் மீது வழக்குப்பதிவு!
Seithipunal Tamil October 20, 2025 12:48 AM

நீதித்துறையை சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அவர் கூறிய சர்ச்சையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீமான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தபோது நீதித்துறையை சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அவர் கூறியது சர்ச்சையானது. இதையடுத்து, சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் போலீசில் புகாரளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து அவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தை அணுகினார். சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்த போது அந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சீமான் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்தே சென்னை திருமங்கலம் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.