மின் விளக்கு உள்ளிட்ட 1093 அறிவியல் கருவிகள் கண்டுபிடித்த ஆக்க மேதை தாமசு ஆல்வா எடிசன் நினைவு தினம் இன்று (அக்டோபர் 18, 1931).
தாமசு ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிப்ரவரி 11, 1847ல் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர். தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் ஏழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார். பின்னர் எடிசனின் குடும்பம் மிச்சிகனிலுள்ள ஊரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது கேட்கும் திறன் பாதித்திருந்தது அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புகளுக்கும் காரணமாகவும் இருந்தது. 1840ல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் கலங்கரைவிளக்கக் காப்பாளராகவும், கிராடியட் கோட்டை ராணுவத் தளத்தின் தச்சராகவும் சாமுவெல் வேலை பார்த்தார்.
தாமஸ் எடிசன்,
இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற திரு.சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள் பிறந்ததினம்!.
இந்திய வானியல் ஆராய்ச்சியாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் 1910ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தார்.
ஒரு நட்சத்திரம் எரிபொருள் தீர்ந்த பிறகு, அடர்ந்த பொருண்மையாக மாறுகிறது என்று கணக்கீட்டு ஆய்வு மூலம் வெளிப்படுத்தினார். சூரியனின் நிறையைவிட 1.4 மடங்குக்கு மேல் இருக்கும் நட்சத்திரம், தனது நிலைத்தன்மையை இழக்கும் எனக் கண்டறிந்தார். இந்தக் குறிப்பிட்ட நிறை அளவு 'சந்திரசேகர் லிமிட்' எனப்படுகிறது.
இவர் தனது அனைத்து ஆராய்ச்சிகளையும் தொகுத்து 'நட்சத்திரங்களின் அமைப்பு' என்ற நூலாக வெளியிட்டார். பத்மவிபூஷண், அமெரிக்க அறிவியல் கழகத்தின் ஃபோர்ட் பதக்கம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் 'ஆடம் பரிசு', ராயல் சொசைட்டியின் 'காப்ளே பதக்கம்' உட்பட பல்வேறு விருதுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார்.
நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வுக்காக 1983ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆராய்ச்சியாளர், ஆசிரியராக விளங்கிய சுப்பிரமணியன் சந்திரசேகர் 84வது வயதில் 1995 ஆகஸ்ட் 21 ஆம் தேதி அன்று மறைந்தார்.