சமீபகாலமாக பெற்றோர்களின் சொத்துக்களை வாங்கிவிட்டு பிள்ளைகள் அவர்களை தனியாக விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பிள்ளைகளிடம் சொத்து முழுவதும் கொடுத்துவிட்டு பெற்றோர்கள் கலங்கி நிற்கிறார்கள். இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முடிவு கட்டும் விதமாக தற்போது தெலுங்கானா மாநில அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அந்த மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, இனி பெற்றோர்களை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு தொகை பிடித்தம் செய்யப்படும்.
10 முதல் 15 சதவீதம் வரை சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு அது பெற்றோர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த புதிய சட்டத்தை விரைவில் கொண்டுவர இருப்பதாகவும் அவர் அறிவித்தார். மேலும் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.