நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் ராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பேட்டை குளத்தைச் சேர்ந்த மாசானம் மகன் ராஜ் (45), கிராக்கி, விதி எண்–3, உயிர் மூச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர். அவரது மனைவி சாய்ஸ் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தம்பதிக்கு ரூபன்ஜான், டைட்டஸ் மேத்திவ் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.
ராஜ் குடும்பத்துடன் தூத்துக்குடி கே.டி.சி. நகரில் வசித்து வந்தார். நேற்று மாலை அவர் தூத்துக்குடியில் இருந்து புதியம்புத்தூர் வழியாக ஓசநூத்து நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, செவல்குளம் அருகே கட்டுப்பாடு இழந்து கீழே விழுந்தார். அப்போது சாலையில் இருந்த கல் மீது மோதியதால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் இன்ஸ்பெக்டர் பால்யேசுதாசன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?