வரும் நவம்பர் 15-ஆம் தேதி தஞ்சையில் தண்ணீருக்காக மாநாடு நடத்தப்படவுள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, நாதக சீமானும் அவரது அதிரடி பாணியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக, ஐம்பூதங்களை அடிப்படையாகக் கொண்டு, நிலம், நீர்,வானம், நெருப்பு, காற்று மாநாடு நடத்தப்படும் என்று ஏற்கனவே சீமான் அறிவித்திருந்தார். அந்தவகையில் தேனியில் ஆடு, மாடு மாநாட்டை நடத்திய அவர், தர்மபுரியில் மலைகளின் மாநாட்டையும் நடத்தினார். தூத்துக்குடியில் கடல் மாநாட்டையும் நடத்துவதாக அறிவித்த சீமான், கடலில் அப்பகுதி மக்களுடன் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.
இந்நிலையில், தஞ்சையில் வரும் நவம்பர் 15-ஆம் தேதி தண்ணீருக்காக மாநாடு நடத்தப்போவதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். திருவையாறு தொகுதியில் கல்லணை அருகே உள்ள பூதலூர் இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.