கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு 2 நாட்கள் தடை!
Dinamaalai October 20, 2025 05:48 PM

‘மலைகளின் இளவரசி’ என புகழ்பெற்ற கொடைக்கானல் பகுதியில் அமைந்துள்ள பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 2 நாட்கள் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை அழகையும், சுற்றுலா அனுபவத்தையும் வழங்கும் இந்த இடத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வருகை தருகிறார்கள்.

தற்காலிக தடை காரணமாக, இன்றும், நாளையும் பேரிஜம் ஏரிக்கு பயணிகள் செல்ல முடியாது. வனத்துறை பராமரிப்பு பணிகள் மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி ஊழியர்களின் விடுமுறை காரணமாக இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

22ம் தேதி முதல் வழக்கம்போல் பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று கொடைக்கானல் வனச்சரகர் செந்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.