2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாம்தமிழர் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தங்கள் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். நாதகவின் மாநில மருத்துவ அணி செயலாளர் ஐசக், ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஊராட்சி நிர்வாகி மணிகண்டன் உள்ளிட்ட பலர் அதிமுகவுடன் கைகோர்த்துள்ளனர்.
இந்த இணைப்பு விழா அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், புதிய நிர்வாகிகளுக்கு கட்சிக்கொடியும் அடையாளச் சின்னமும் வழங்கப்பட்டது. வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அதிமுக வலுவாகக் களம் இறங்கியுள்ள நிலையில், நாதகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் இணைந்தது அந்த மாவட்ட அரசியலில் அதிமுகவுக்கு பலம் சேர்த்துள்ளது என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன