“பிரம்மோஸ் பெயரை கேட்டால் பதற்றம்”- போர்க்கப்பலில் தீபாவளி கொண்டாடிய மோடி
Top Tamil News October 20, 2025 11:48 PM

பிரதமர் நரேந்திர மோடி ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளியைக் கொண்டாடினார்.

ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் இருந்தபடி தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி வான் சாகசத்தை கண்டுகளித்தார். பின்னர் ஆயுதப்படைபேசிய பிரதமர் மோடி, “ஐ.என்.எஸ். விக்ராந்த் வெறும் போர்க்கப்பல் மட்டுமல்ல, 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் கடின உழைப்பு, திறமை, தாக்கம் மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். ஐ.என்.எஸ். விக்ராந்த் என்பது தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் தயாரிப்போம்  ஆகியவற்றின் தலைசிறந்த சின்னமாகும். முப்படைகளுக்கும் இடையிலான அசாதாரண ஒருங்கிணைப்பு, சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானைச் சரணடைய கட்டாயப்படுத்தியது. உலகின் சிறந்த பாதுகாப்பு ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் குறிக்கோள். இந்தியக் கடற்படை இந்தியப் பெருங்கடலின் பாதுகாவலராக நிற்கிறது. நமது பாதுகாப்புப் படைகளின் வீரம் மற்றும் உறுதிப்பாட்டிற்கு நன்றி, நாடு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது, நாங்கள் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை ஒழித்து வருகிறோம்.

விக்ராந்த் வெறும் போர்க்கப்பல் அல்ல, இது 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் கடின உழைப்பு, திறமை, தாக்கம் மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். நாடு உள்நாட்டிலேயே கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்தைப் பெற்ற நாளிலேயே, இந்திய கடற்படை காலனித்துவ மரபின் முக்கிய சின்னத்தைக் கைவிட்டது. உள்நாட்டிலேயே கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த்,  இந்தியாவின் ராணுவ வலிமையை பிரதிபலிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, விக்ராந்தின் பெயரே பாகிஸ்தானின் தூக்கத்தைக் கெடுத்ததை  நினைவு கூர்ந்தார். ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற போர்க்கப்பல் எதிரிகளின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க போதுமானது” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.