இப்படியொரு கொண்டாட்டமா….? கூகுள் அலுவலகத்தின் பிரமாண்ட தீபாவளி…. ரங்கோலி, விருந்து, வேடிக்கை…. ஐடி ஊழியர்களை பொறாமைப்பட வைத்த வைரல் வீடியோ….!!
SeithiSolai Tamil October 21, 2025 02:48 AM

ஹைதராபாதில் உள்ள கூகுள் அலுவலகத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அலுவலகம் வண்ணமயமான ரங்கோலி, விளக்குகள், அலங்காரங்களால் அழகாக இருந்தது. ஊழியர்கள் ரங்கோலி வரைதல், விளையாட்டுகள், போட்டோ பூத் போன்றவற்றில் மகிழ்ச்சியாக பங்கேற்றனர். பலவகை இந்திய உணவுகளும், தீபாவளி இனிப்புகளும் பரிமாறப்பட்டன. இது ஊழியர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளித்தது.

View this post on Instagram

இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், “இப்படி ஒரு கொண்டாட்டமா? பொறாமையாக இருக்கு!” என்று வேடிக்கையாக கூறினர். “இந்த பதிவுகளை பார்க்க முடியல, பிளாக் பண்ணுங்க!” என்று சிலர் சிரித்தனர். மற்றவர்கள், “கூகுளில் காவலாளியாக இருக்கவே பி.டெக் வேணும் போல!” என்று கிண்டல் செய்தனர். இந்த தீபாவளி கொண்டாட்டம் பாரம்பரியத்தையும் வேடிக்கையையும் இணைத்து, மக்களை ஆச்சரியப்படுத்தி, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.