தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் இன்று வரை தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து 23 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த ஆவடி பட்டாபிராம் பகுதியில் நாட்டு பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதேநிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 14 பேர் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.
தீயணைப்பு துறையின் அறிவிப்பின்படி, ராக்கெட் மற்றும் வானவேடிக்கை வகை பட்டாசுகள் மூலம் 11 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. மற்ற வகை பட்டாசுகளால் 12 தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. சென்னையில் மட்டும் 4 அழைப்புகள் வந்துள்ளன; இதில் 3 அழைப்புகள் மற்ற வகை பட்டாசு விபத்துக்காகவும், 1 அழைப்பு ராக்கெட் பட்டாசு விபத்துக்காகவும் வந்தது.
தீயணைப்பு துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, பட்டாசு வெடிப்பதில் அதிக பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?