ஷூட்டிங் ஓவர்… அறிவிப்பு வீடியோவை வெளியிட்ட பராசக்தி படக்குழு
TV9 Tamil News October 21, 2025 02:48 AM

நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. ரொமாண்டிக் ஆக்‌ஷன் பட பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கி இருந்தார். சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவில் இந்தப் படத்தை இயக்கியதன் காரணமாக இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. ஆனால் படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தைப் பெற்று இருந்தாலும் இந்தப் படத்தின் வசூல் 100 கோடி ரூபாயை கடந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பணிகளில் இருக்கும் போதே நடிகர் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்திற்காக இயக்குநர் சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்தார்.

இந்தப் படத்தில் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி இந்தப் படம் 60களில் இந்தி எதிர்ப்பு கொள்கையை மையமாக வைத்து உருவாகும் படம் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வரும் நிலையில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பராசக்தி படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:

இந்த நிலையில் இந்தப் படம் வருகின்ற ஜனவரி மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த அறிவிப்பை முன்னதாக படக்குழு அறிவித்து இருந்த நிலையில் இந்தப் படம் ஜன நாயகனுடன் போட்டிப் போடுவது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அப்டக்குழு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வீடியோ மூலம் தங்களது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… பிக்பாஸில் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

The Start Towards our Final Destination 🚉🧨

பராசக்(தீ)பாவளி நல்வாழ்த்துக்கள்🔥✨

That’s a Wrap for #Parasakthi#ParasakthiFromPongal #ParasakthiFromJan14@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14… pic.twitter.com/O3A5bykL2N

— DawnPictures (@DawnPicturesOff)

Also Read… சூர்யா 46 படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் பிரபல நடிகரின் மகன்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.