சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று பகல் 1 மணி வரை செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள், அத்துடன் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.
அரியலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில்
லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
இதன் மூலம், சென்னை உட்பட மொத்தம் 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Edited by Siva