வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.20) தமிழகத்தின் 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை (அக்.21) திருவள்ளூர், சென்னை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மக்கள் அவசியமில்லாமல் வெளியே செல்லாமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது