அடுத்த மாதம் நடைபெறவுள்ள பீகார் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பாலோரும் பிரபல தலைவர்களின் வாரிசுகள் என்பதே அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ராஷ்டிரிய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவின் மகனும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார். பா.ஜனதா சார்பில் தாராபூர் தொகுதியில் நிற்பவர் துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி; அவர் முன்னாள் மந்திரி சகுனி சவுத்ரியின் மகன். ரகுநாத்பூர் தொகுதியில் போட்டியிடும் ராஷ்டிரீய ஜனதாதள வேட்பாளர் ஒசாமா ஷஹாப், முன்னாள் சகாபுதீனின் மகன் என்ற அடையாளத்தோடு வருகின்றார்.
பா.ஜனதா கூட்டணிக் கட்சியான ராஷ்டிரீய லோக் மோர்ச்சா தலைவர் உபேந்திர குஷ்வாஹாவின் மனைவி சினேகலதா சசாரம் தொகுதியில் நிற்கிறார். முன்னாள் முதல்-மந்திரி ஜகந்நாத் மிஸ்ராவின் மகன் நிதிஷ் மிஸ்ரா, ஜன்ஜார்பூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர். மத்திய மந்திரி ஜிதன் ராம் மஞ்சியின் மருமகள் தீபா மஞ்சி இமாம்கஞ்சில், கர்ப்பூரி தாக்கூரின் பேத்தி ஜாக்ரிதி தாக்கூர் மோர்வாவில் போட்டியிடுகிறார்கள்.
ஐக்கிய ஜனதாதள எம்.பி. கிர்தாரி பிரசாத் யாதவின் மகன் சாணக்ய பிரசாத் ரஞ்சன் பெல்ஹரில் ராஷ்டிரீய ஜனதாதள வேட்பாளராக உள்ளார். லோக் ஜனசக்தி எம்.பி. வீணா தேவியின் மகள் கோமல் சிங் கெய்காட் தொகுதியில் ஐக்கிய ஜனதாதள சார்பில் களமிறங்குகிறார். அதே கட்சி எம்.பி. லவ்வி ஆனந்தின் மகன் சேட்டன் ஆனந்த் நபிநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ராஷ்டிரீய ஜனதாதள மூத்த தலைவர் சிவானந்த் திவாரியின் மகன் ராகுல் திவாரி ஷாபூர் தொகுதியில் களமிறங்குகிறார்.
இந்த நிலைமையைக் கண்டறிந்து கருத்து தெரிவித்த ஏ.என்.சின்ஹா சமூகக் கல்வி நிறுவன பேராசிரியர் வித்யார்த்தி விகாஸ், “கட்சிகள் எந்தவொரு கொள்கை, ஜனநாயக ஒழுங்கு குறித்து கவலைப்படுவதாக இல்லை. வாரிசு அரசியலை எதிர்க்க தார்மீக நிலை பேசும் தகுதி எந்த கட்சிக்கும் இல்லை. பீகார் கல்வியில் பின்தங்கியிருப்பதே இதற்குக் காரணம். மக்கள் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்” என கூறினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?