அதிர்ச்சி! நள்ளிரவில் மனைவியை பாலத்தில் இருந்து தள்ளி கொன்ற கொடூர கணவன்… தெலுங்கானாவில் நடந்த பகீர் சம்பவம்..!!!
SeithiSolai Tamil October 20, 2025 06:48 PM

தெலுங்கானா மாநிலத்தின் மண்சேரியல் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நஸ்பூர் போலீஸ் ஸ்டேஷன் வரம்பிற்குள் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் பாலம் மீது, ஒரு பெண்ணை கணவன் தள்ளி கொன்ற சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மந்தமர்ரி பகுதியைச் சேர்ந்த ரஜிதா என்ற பெண்ணை, அவரது கணவன் குமார் சுவாமி பாலத்தின் மேல் இருந்து தள்ளியதாக போலீசார் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். சம்பவம் இரவு 2 மணியளவில் நடைபெற்றது என்று கூறப்படுகிறது.

உடனடியாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ரஜிதாவின் உடலை மீட்டு மண்சேரியல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மனைவியின் நடத்தை குறித்து கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கோபத்தின் பேரில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் கூறினர்.

இந்நிகழ்வைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.