"அனைவரும் சந்தோசமா, ஆரோக்கியமா வாழ வேண்டுகிறேன்"- ரஜினிகாந்த்
Top Tamil News October 20, 2025 06:48 PM
வீட்டில் இருந்தவாறு கையசைத்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொன்ன நடிகர் ரஜினிகாந்த். 

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளில் ரஜினி ரசிகள்கள் நடிகர் ரஜினியிடம் வாழ்த்துகளை பெற அவரின் இல்லத்துக்கும் முன்பு கூடுவார்கள்.  அந்த வகையில் தீபாவளி பண்டிகையை யொட்டி வாழ்த்துகளை பெற சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்துக்கு முன்பு காலை முதல் ரசிகர்கள் கார்த்திருந்தனர். மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். 

தன்னுடைய விட்டில் இருந்தவாறு கையசைத்து வாழ்த்துகள் சொன்ன நடிகர் ரஜினிகாந்தை பார்த்து அவரின் ரசிகர்கள் தலைவா தலைவா என்று ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்.... அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள் எல்லோரும் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறினார். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.