வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக, நேற்றைய தினம் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து தூதரக சேவை சந்திப்புகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று ரத்து செய்யப்பட்டிருந்த அனைத்துத் தூதரக சேவை சந்திப்புகளும் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூதரக சேவை சந்திப்புகள் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அவர்கள் விசா விண்ணப்ப மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும், அல்லது support-india@usvisascheduling.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்றும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran