பிக்பாஸ்ல ஃபுல்லா பைத்தியங்கதான்.. மரண மாஸ் கொடுத்த வினோத்.. தல வேற லெவல்
CineReporters Tamil October 24, 2025 01:48 AM

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்து வருகிறது. சமீபகாலமாக போட்டியாளர்களுக்குள் கடும் சண்டை மோதல் இருப்பதை பார்க்க முடிகிறது. பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி இரண்டு வாரங்கள் எட்டிய நிலையில் சமீபத்தில்தான் பிக்பாஸ் வீட்டிற்குள் தீபாவளியை போட்டியாளர்கள் கொண்டாடினார்கள். அனைவரும் தலையில் எண்ணெய் வைத்து புது ஆடைகள் எல்லாம் உடுத்தி சிறப்பாக தீபாவளியை கொண்டாடினார்கள்.

விஜய்சேதுபதி தரப்பில் இருந்து உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு சிறப்பு விருந்து வைக்கப்பட்டது. எட்டு சீசன்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால் இந்த சீசனுக்கு ஆடியன்ஸ் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஏனெனில் முகம் சுழிக்க வைக்கிற நடவடிக்கைகள், பேச்சுக்கள் என போட்டியாளர்கள் வரம்பு மீறி போய்க் கொண்டிருப்பதாக பல பேர் கூறுகிறார்கள்.

அதுவும் டபுள் மீனிங் என்ற பெயரில் அவர் பேசும் அந்த உரையாடல்கள் கேட்கவே முடியாத வகையில் இருக்கின்றன. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் மாறிக் கொண்டிருப்பதால் இந்த மாதிரி செயல்களை தடைசெய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுகின்றன. இல்லாவிடில் பிக்பாஸ் சீசன் 9ஐ மொத்தமாக நிறுத்தவேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி பிக்பாஸ் வீட்டிற்குள் மொத்தமாக கண்டெண்ட் கொடுக்கும் மெட்ரீயலாக மாறி வருகிறார் கானா வினோத். இவரும் திவாகரும் சேர்ந்தாலே மாஸ்தான் என்றளவுக்கு இவர்கள் காம்போவை ரசிகர்கள் தற்போது ரசிக்க தொடங்கியிருக்கிறார்கள். மெய்யழகன் கார்த்தி அரவிந்த்சாமி மாதிரிதான் வினோத்தும் திவாகரும் என்றும் கூறிவருகிறார்கள்.

இருவருமே அவ்வப்போது சண்டையிட்டும் கொள்கிறார்கள். பாசத்தையும் கொட்டிக் கொள்கிறார்கள். இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. திவாகரும் கம்ருதீனும் கேமிரா முன்னாடி நின்று பாடிக் கொண்டிருப்பார்கள். தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வினோத் எழுந்து வந்து அந்த கேமிராவை பார்த்து ‘பிக்பாஸ் வீட்டிற்கு வந்தால் பைத்தியங்கள் நிறைய இருக்கின்றன. என்னையும் சேர்த்துதான் சொல்றேன். 

வந்து செக் பண்ணிட்டு யாரெல்லாம் பைத்தியமோ அவங்கள மட்டும் இழுத்துப் போயிடுங்க’ என்று அசால்ட்டா சொல்லிவிட்டு செல்வார். ஆனால் உண்மையிலேயே வெளியே இருக்கும் ஆடியன்ஸும் இந்த சீசன் முழுக்க பைத்தியங்களை கொண்டு வந்து நிறுத்தியிருக்காங்க என்றுதான் விமர்சித்து வந்தார்கள்.தற்போது அதை உறுதிபடுத்தியிருக்கிறார் வினோத்.

View this post on Instagram

A post shared by Mudinjaorucupcoffeee (@mudinjaorucupcoffeee)

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.