உண்மையான இந்தியாவின் ஒற்றுமை…. மறைவாக பட்டாசு வெடித்துத் தீபாவளியைக் கொண்டாடிய முஸ்லிம் குடும்பம்…. ஏன் இந்தத் தயக்கம்….? இதயங்களைத் தொட்ட வைரல் வீடியோ….!!
SeithiSolai Tamil October 24, 2025 01:48 AM

சமூக வலைதளத்தில் வெளியான காணொளி ஒன்று பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே தீபாவளி கொண்டாட்டமாக தான் இருக்கிறது. தீபாவளி இந்துக்கள் கொண்டாடும் பண்டிகையாக இருந்தாலும் மற்ற மதத்தினரும் இந்த பண்டிகையை குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்வர். அந்த வகையில் ஒரு முஸ்லிம் குடும்பம் இரவில் ஸ்கூட்டரில் வந்து சாலை ஓரமாக நிறுத்துகிறது. கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் சுற்றிலும் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, மறைவாக பட்டாசுகளை வெடித்துத் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை X தளத்தில் @KantInEastt என்ற பயனர் பகிர்ந்த நிலையில், அது 52,000-க்கும் அதிகமான லைக்குகளைப் பெற்று வைரலாகி உள்ளது. சமூகத்திடமிருந்து மறைந்து, தயக்கத்துடன் அவர்கள் கொண்டாடும் விதம், இந்தக் குடும்பம் ஒருவித அச்சத்தின் காரணமாக இவ்வாறு செய்வதாகக் காட்டுகிறது. பட்டாசுகள் வெடித்தது தொடர்பாகத் தீபாவளி அன்று சர்ச்சைகள் நிலவிய சூழலில், இந்த வீடியோ நாட்டின் உண்மையான மத நல்லிணக்கத்தைக் காட்டுவதாகப் பாராட்டப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Bright Side Of India (@brightsideofindia)

இது ‘கங்கா-ஜமுனா தெஹ்சீப்’ (இந்தியா-முஸ்லிம் கலாச்சார ஒற்றுமை) என்ற இந்தியாவின் சமாதான உணர்வை வெளிப்படுத்துகிறது. ஒரு முஸ்லிம் குடும்பம், இந்துக்களின் முக்கியப் பண்டிகையான ஸ்ரீராமர் வனவாசத்திலிருந்து திரும்பிய நாளை (தீபாவளியை) மகிழ்ந்து கொண்டாடுவதை இந்த வீடியோ காட்டுகிறது. இந்தச் செயல் நாட்டின் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.
>

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.