தெலுங்கானா மாநிலம் மேகபூப் நகர் மாவட்டம் ஜட் சர்லா அருகே உள்ள கங்காபுரத்தில் அமைந்துள்ள லட்சுமி சென்ன கேசவ சாமி கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் நடைபெறும் சிறப்பு நடைமுறை பக்தர்களிடம் பெரும் ஆவலையும் பக்திச் சிந்தனையையும் ஏற்படுத்தியுள்ளது.
விழாவின்போது, சாமியின் காலணிகளுக்கு சிறப்பு பூஜை செய்து, ஊர்வலமாக கோவிலுக்குள் கொண்டுசெல்லும் மரபு பழங்காலமிலிருந்தே வழக்கில் உள்ளது.
இவ்விழாவின் முக்கிய தனித்துவம், சாமி தரிசனம் முடிந்து வெளியில் வரும் பக்தர்களின் தலையில் சாமியின் செருப்பால் அடித்து ஆசீர்வாதம் செய்வதாகும். இந்த வழக்கை கோவில் நிர்வாகத்தினர் பல ஆண்டுகளாக பாரம்பரிய முறையில் கடைப்பிடித்து வருகின்றனர்.
“சாமியின் செருப்பால் ஆசீர்வாதம் பெற்றால் நோயின்றி நலமாக வாழலாம், நன்மைகள் கிட்டும்” என்ற நம்பிக்கையில் பக்தர்கள் இந்த விசித்திர அனுபவத்துக்கு ஏங்கி வருகிறார்கள். இந்த பாரம்பரியம் பக்தர்களிடையே மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் திரண்டு பக்தி பரவசத்தில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது