பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக நுழையவுள்ள புதிய பேர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நிகழ்ச்சி மூன்று வாரங்களைக் கடந்த நிலையில், புதிய போட்டியாளர்கள் வருகை தரவுள்ளார்கள். இந்த சீசனில் பிக் பாஸ் வீடு மற்றும் சொகுசு வீடு என இரு அணிகளாக போட்டி நடைபெற்று வருகிறது.

முதல் வாரத்தில் நந்தினி விருப்பப்படி வெளியேறியதுடன் இயக்குநர் பிரவீன் காந்தியும் வெளியேறியுள்ளனர். இரண்டாவது வாரம் அப்சரா வெளியேறிய பின்னர், மூன்றாவது வாரத்தில் அரோரா, துஷார், ஆதிரை, கானா வினோத், ரம்யா ஜோ, அகோரி கலையரசன், பிரவீன், சுபிக்ஷா, வியனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். குறைந்த வாக்குகளைப் பெற்றோர் அந்த வாரம் வெளியேறுவார்கள்.

இதன் பின்னர், பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு வாயிலாக நடிகர் ப்ரஜின் மற்றும் அவரது மனைவி சான்ட்ரா நுழையவுள்ளார்கள். நிஜ வாழ்வில் கணவன் - மனைவியாக இருக்கும் இந்த இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேர்ந்து போட்டியாளர்களாக விளையாட உள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!