தமிழகத்தில் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா, போதைப் பொருட்களின் விற்பனை நடந்து வரும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக வாட்ஸ் அப் மூலமாக கல்லூரி மாணவர்களை டார்கெட் செய்து விபச்சாரம் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல் துறை, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்படி, சட்டவிரோதமாக பாலியல் தொழில் செய்யும் நபர்களை தடுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் படி, விபச்சார தடுப்பு பிரிவு-1 போலீசார் நெற்குன்றம் கோல்டன் ஜார்ஜ் நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகளை கவனித்து வந்தனர். அப்பகுதி மக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததையும் கருத்தில் கொண்டு, எட்டியப்பன் தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கண்காணிப்பு மூலம், ஒரு வீட்டிற்கு அடிக்கடி வாலிபர்கள் வந்து செல்வதை போலீசார் கண்டனர். உடனே அந்த வீட்டிற்கு புகுந்து சோதனை செய்த போது, நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பாலியல் புரோக்கர் ராஜா (55) இரண்டு இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், ராஜா அப்பகுதியிலுள்ள பல பொறியியல் கல்லூரிகளை குறிவைத்து வீடு வாடகைக்கு எடுத்து, கல்லூரி மாணவர்களை குறிவைத்து பாலியல் தொழில் செய்துள்ளார் என்றும் தெரிந்தது.

மேலும், ராஜா தனியாக வாட்ஸ் அப் குழு அமைத்து, இளம் பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி பாலியல் தொழில் செய்தார். போலீசார் அவரை உடனடியாக கைது செய்தனர். போலீசார் இரண்டு இளம் பெண்களை மீட்டனர் மற்றும் பாலியலுக்கு பயன்படுத்திய ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?