ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பீர்பால் (23), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் செல்ல நண்பருடன் சென்று, அக்டோபர் 13ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருந்த போது, வெளி மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அவர்களை மோசடிக்குள்ளாக்கினர்.

இவர்களிடம், ரயில் டிக்கெட் உடனடியாக முன்பதிவு செய்து தருவதாக கூறி பீர்பால் மற்றும் அவரது நண்பரை தனியிடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரைத் தாக்கி விட்டு, அவரிடம் இருந்து பணம், செல்போன்களை பறித்து சென்றனர்.
மேலும், குற்றவாளிகள் பறிக்கப்பட்ட செல்போன்களில் உள்ள கடவுச் சொல்லை (பாஸ்வேர்ட்) பயன்படுத்தி ரூ.48,000 ஜிபே மூலம் அவர்களின் வங்கி கணக்குக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. சம்பவத்துக்குப் பிறகு அவர்கள் தப்பினர். அதிர்ச்சியடைந்த பீர்பால் தனது நண்பருடன் சென்று சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் சோதனையில், குற்றவாளிகள் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ராம் (24) மற்றும் தினேஷ்குமார் முகியா (21) என அடையாளம் காணப்பட்டனர். அவர்களை எழும்பூர் ரயில் நிலையம் அருகே கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மொத்தம் 18 செல்போன்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், சென்ட்ரலில் பீர் பால் மற்றும் நண்பரிடம் பறித்ததைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் ரயில் நிலையங்களில் தூங்கிக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து 16 செல்போன்களைத் திருடியதும் தெரிய வந்தது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?