தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் திடீர் உயர்வு? பொதுமக்கள் புகாருக்கு அதிகாரிகள் விளக்கம்!
WEBDUNIA TAMIL October 24, 2025 05:48 PM

கடந்த மாத மின் கட்டணம் தங்களுக்கு அதிகமாக வந்துள்ளதாக பலர் புகார் அளித்துள்ள நிலையில் அதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் அளவீடு பணிகள் நடக்கும் நிலையில் மின்சார பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சுற்றில் தங்களுக்கு அதிகமான மின் கட்டணம் வந்துள்ளதாக மக்கள் பலர் புகார் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் அளித்த விளக்கத்தில், மின் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்றும், தமிழக அரசின் நெறிமுறைகளின்படியே மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், 100 யூனிட்டிற்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் கட்ட தேவையில்லை என்ற நிலை தொடர்வதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் அதேசமயம் சில பகுதிகளில் மின் கணக்கீடு செய்ய செல்லும் அலுவலர்கள் கால தாமதமாக சென்றதால் மின் கட்டணம் சற்று உயர்ந்திருப்பதாக கூறியுள்ள அவர்கள், மின் அளவீடு செய்பவர்கள் சரியான நேரத்தில் மின் கணக்கீட்டை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.