இந்தியா ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில். இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் போட்டியில் விளையாடி வருகிறார். இந்த நிலையில் இவர் அட்டிலெய்டு தெருக்களில் நடந்து சென்ற போது ஒரு ரசிகர் திடீரென வந்து கில்லுக்கு கை கொடுத்தார். பின்னர் அவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறினார். இருப்பினும் கில் அதனை கண்டுகொள்ளாதவாறு அங்கிருந்து நகர்ந்தவாறு சென்றார். முன்னதாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்கள் கோப்பையை வென்ற நிலையில் பாகிஸ்தான் அணிக்கு கை கொடுக்கவில்லை.
முன்னதாக டாஸ் போடும்போதும் சரி விளையாட்டுக்கு பிறகும் சரி இந்திய வீரர்கள் அவர்களுக்கு கைகொடுக்க மறுத்துவிட்டனர். இதேபோன்று இந்திய மகளிர் அணியும் பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு கைகொடுக்க மறுத்தனர். இந்த சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது கில்லுக்கு ஒருவர் கை கொடுத்துவிட்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் கில் அதனை சுமுகமாக கையாண்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்திய ரசிகர்கள் பலரும் அந்த நபரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.