கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 5 பேர் கொண்ட கும்பல், வீட்டிற்குள் புகுந்து கத்திமுனையில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் கங்கொண்டனஹள்ளி பகுதியில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. இந்த சம்பவத்துடன் சேர்ந்து அவரை மிரட்டி வீட்டிலிருந்த ரூ.25,000 ரொக்கம் மற்றும் இரண்டு செல்போன்களைத் திருடி சென்றனர்.

இது குறித்து இளம்பெண் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரை மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் தெரிவிக்கையில், “டி.எஸ்.பி மட்டத்திலான அதிகாரி வழிகாட்டும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இளம்பெண்ணுக்கு முன்பே தெரிந்தவர்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம், பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?