சமூக வலைதளங்களில் ஒரு கிளியின் (Miyan Mithu) வீடியோ படு வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு கிளியைப் பிடிக்க போலீஸ் வந்தபோது, அது திடீரென மிகத் தெளிவான ஆங்கிலத்தில் பேசியதுதான் ஹைலைட்!
போலீஸாரைப் பார்த்ததும் கிளி, “நான் இதைச் செய்யவில்லை (I didn’t do it). யாராவது சொன்னால், கேமராவைச் சரிபார்க்க வேண்டும் (Check the camera if someone says). இப்படி என்னைக் கைது செய்ய முடியாது (You can’t arrest me like this)!” என்று சூப்பராகப் பேசியது.
கிளியின் இந்தக் கோபமான மற்றும் சாமர்த்தியமான பதிலைக் கேட்டு அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் உட்பட அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். கிளியின் தோற்றமும் (Look), அதன் பேச்சும் அனைவரையும் கவர்ந்து இழுத்தது. இந்த வீடியோ தற்போது லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வருகிறது. வீடியோவைப் பார்த்த பயனர்கள், “இது எங்களோட நாளை சந்தோஷமா ஆக்கியது!” என்று கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர், “கிளியும் மனுஷங்க மாதிரி புரிந்துகொண்டு பேசுது!” என்று வியந்துபோனார்கள். “எல்லாக் கிளியும் இப்படிப் பேசினால், போலீஸ் வேலை ரொம்பக் கஷ்டமாயிடும்!” என்று சில நெட்டிசன்கள் நகைச்சுவையாகக் கலாய்த்தனர். மியான் மித்துவின் ஆங்கிலத் திறனும், சாமர்த்தியமான பதிலும் எல்லாரையும் சிரிக்க வைத்துள்ளது.