கண் திருஷ்டி நீங்குவதற்கு வெள்ளிக்கிழமைகளில் இதைச் செய்து வந்தால் போதும். அதனால் வெள்ளிக்கிழமையை மிஸ் பண்ணாமல் இதைச் செய்து பாருங்க. பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு உகந்தவையான நாளாக இருக்கும். அதுவும் தை மாதத்தின் வெள்ளிக்கிழமை கூடுதல் விசேஷம்.

ஒவ்வொரு மாதமும் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உரிய அற்புதமான நாட்கள். அதனால் தான் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மகாசக்தி குடிகொண்டிருக்கும் தலங்களில் பெண்கள் முதலான பக்தர்கள் பலரும் வணங்கி வழிபடுகிறார்கள்.

வெள்ளிக்கிழமையான இன்று அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்தால் நன்மைகள் யாவும் கிடைக்கும். முடிந்தால், அம்மனுக்கு செந்நிற மலர்கள் சூட்டி வழிபடலாம். செவ்வரளி மாலை சார்த்தி அம்மனை இன்று வணங்குவது சிறப்பு.
வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில் அம்மன் கோவிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்க்கை சன்னிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களையும், கண் திருஷ்டியையும் நீக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். துர்க்கை சன்னிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபடுங்கள். வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். வீட்டில் மங்கள காரியங்கள் விரைவில் நடக்கும். தை வெள்ளிக்கிழமைகளில், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல், கேசரி என ஒவ்வொரு வாரமும் ஏதேனும் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கி அம்மனை வழிபட்டு வந்தால் தனம், தானியம் பெருகி நிறைவான வாழ்க்கையை வாழலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?