பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக ராஷ்டிர ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் அறிவித்தார். பெயர் அறிவிப்பில் பெரும் இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்பொழுது அறிவிப்பு வெளியாகி உள்ளது. பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் துணை முதலமைச்சர் வேட்பாளராக விகாஸ்ஷில் இன்சான் கட்சியின் தலைவர் முகேஷ் சகானி தேர்வாகியுள்ளார். 35 வயதே ஆன ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், 74 வயதாகும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளார்.