வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. தற்போது இது தமிழ்நாட்டின் வடக்கில் நிலைகொண்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிப்பதாவது, இந்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு கர்நாடக பகுதிகளில் மேலும் வலுவிழக்கக்கூடும்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் மாலை 4 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் அருகிலுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால், நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதோடு, அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வழங்கியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!