ஒரே ஒரு சிப் போதும்.. இனி கண் தெரியாதவர்களும் படிக்கலாம்.. வியக்க வைக்கும் விஞ்ஞானம்!
TV9 Tamil News October 25, 2025 11:48 AM

மனிதனின் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பு என்றால் அது கண் தான். கண் இல்லை என்றால் மனிதனால் இயல்பாக இயங்கவே முடியாது. கேட்பதற்கு காதுகள், செயல்களை செய்ய கைகள், நடப்பதற்கு கால்கள் இருந்தாலும், கண் பார்வை இல்லை என்றால் மனிதன் முடங்கி கிடக்க வேண்டிய சூழல் தான் ஏற்படும். புத்தகம் படிப்பது, திரைப்படங்கள் பார்ப்பது, அன்புக்குறியவர்களை நேரில் பார்த்து பேசுவது என அனைத்தும் கண் பார்வை உள்ளவர்களுக்கு மிக சாதாரனமாக உள்ளது. ஆனால், கண் பார்வை இல்லாதவர்களுக்கு இவையெல்லாம் தவமாக உள்ளன. இவ்வாறு பல காலமாக பார்வையற்றவர்கள் தவமிருந்து வந்த நிலையில், அவர்களுக்கான புதிய அம்சம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்வையற்றவர்கள் இனி சுலபமாக படிக்கலாம்.

ட்ரை ஏடிஎம் கண் பிரச்னையால் அவதிப்படும் லட்சக்கணக்கான மக்கள்

ஜியோகிராபிக் அட்ரோபி நோயால் பாதிக்கப்பட்டு படிப்படியாக பார்வையை இழக்கும் நபர்களின் வாழ்க்கை மிகவும் கொடுமையானதாக உள்ளது. இந்த நோய்க்கு இதுவரை எந்த சிகிச்சையும் இல்லாமல் உள்ளது. இதேபோல ட்ரை ஏடிஎம் என்பது அதிக மக்களை பாதிக்கும் நோயாக உள்ளது. இது மனிதர்களின் கண்ணில் மிக முக்கிய பகுதியாக உள்ள மாக்யுலா (Macula) என்ற பகுதியை பாதிப்பதால் ஏற்படுகிறது. அதாவது, இந்த நோய் கண்ணின் மைய பகுதியில் உள்ள செல்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க தொடங்கும். இதனால் காலப்போக்கில் நோயாளிகளுக்கு கண்ணின் மையப்பகுதியில் மட்டும் கண் பார்வை போய்விடும். அதாவது ஒரு புகைப்படத்தை பார்க்கும்போதோ அல்லது புத்தகத்தை படிக்கும்போதோ அவற்றின் மைய பகுதி மறைந்து அதனை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமே தெரியும்.

இதையும் படிங்க : Flight Mode : பிளைட் மோடை இதற்கெல்லாம் பயன்படுத்தலாமா?.. அட இது தெரியாம போச்சே!

இனி கண் தெரியாதவர்களும் கூட படிக்கலாம்

இவ்வாறு பார்வையை இழந்து பார்க்க முடியாதவர்கள் மற்றும் படிக்க முடியாதவர்களுக்காக ஒரு அசத்தல் அம்சம் அறிமுகமாகியுள்ளது. அதாவது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் கண்ணுக்குள் இருக்கும் ஜெல்லை நீக்கிவிட்டு, அந்த பகுதியில் கண்ணின் ரெட்டினாவுக்கு அடியில் மைக்ரோ சிப் ஒன்றை பொருத்துவர். இந்த அறுவை சிகிச்சை செய்து முடித்த ஒரு மாதம் கழித்து கண் குணமாகி இந்த சிஸ்டம் ஆன் செய்யப்படும். இதனுடன் ஒரு ஏஆர் கண்ணாடியும் வழங்கப்படும். இந்த நிலையில், கண் தெரியாதவர்கள் பார்க்க நினைக்கும் காட்சியை அந்த கண்ணாடியில் இருக்கும் கேமரா படம் பிடிக்கும். அதனை இடுப்பி பொருத்தப்பட்டு இருக்கும் கம்ப்யூட்டருக்கு அனுப்பும். அது பிராசசஸ் செய்யப்பட்டு மீண்டும் அந்த மைக்ரோ சிப்புக்கு அனுப்பும். இதன் மூலம் செயலிழந்த ரெட்டினா மீண்டும் செயல்படும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.