Rain Updates: வங்கக்கடலில் உருவாகிறது 'Montha' புயல் - சென்னையில் மழை எப்படி இருக்கும்?
Vikatan October 25, 2025 09:48 PM

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் 26 ஆம் தேதி ஆழ்ந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், 27ஆம் தேதி காலை புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

Rain update

இந்த புயலால் வட தமிழகம், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. தாய்லாந்து நாடு பரிந்துரைந்த 'Montha' என்னும் பெயர் இந்த புயலுக்கு சூட்டப்பட இருக்கிறது.

இந்த புயலானது ஆந்திரா நோக்கி சென்றாலும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.