
ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை அக்டோபர் 11ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. கத்தார் மத்தியஸ்தத்தால் மோதல் முடிவுக்கு வந்தாலும், எல்லை மூடல் நீடிப்பதால் இரு நாடுகளிலும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையின் விளைவாக, பாகிஸ்தானில் தக்காளியின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. முன்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து தினமும் சுமார் 500 கொள்கலன் காய்கறிகள் இறக்குமதியான நிலையில், விநியோகம் தடைப்பட்டதால் தக்காளியின் விலை 400 சதவீதம் அதிகரித்து, ஒரு கிலோ ரூ.600 வரை விற்கப்படுகிறது. பாகிஸ்தானிய உணவுமுறையில் தக்காளி முக்கிய பங்கு வகிப்பதால், இந்த விலை உயர்வு மக்களை பெரிதும் பாதித்துள்ளது.
எல்லை மூடலால் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், இரு நாடுகளும் ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் டாலர்களை வர்த்தக இழப்பாக சந்தித்து வருவதாக வர்த்தக சபைத் தலைவர் கான் ஜான் அலோகோசி தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran