
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், காதல் பிரேக் அப் காரணமாக 24 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த சோனு பராய் மற்றும் மனிஷா யாதவ் காதலித்து வந்த நிலையில், மனிஷா வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சோனு சந்தேகித்தார். எட்டு நாட்களுக்கு முன்பு மனிஷா காதலை முறித்துக்கொண்டதால், சோனுவின் சந்தேகம் அதிகரித்தது.
இதையடுத்து, நேற்று காலையில் சோனு, மனிஷாவை ஒரு முதியோர் இல்லம் அருகே சந்தித்து பேச அழைத்தார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த சோனு, தான் மறைத்து வைத்திருந்த சமையலறை கத்தியால் மனிஷாவை கொடூரமாக குத்திக் கொலை செய்தார். உடனடியாக, அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு சோனுவும் தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Edited by Siva