கிறிஸ்துமஸ் பண்டிகையும், அரையாண்டு விடுமுறையும் நெருங்கிவருவதால் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் டிக்கெட் கிடைப்பது கடினமாக இருப்பதால், பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த முறை, டிசம்பர் 22ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தென்மாவட்ட ரயில்களான கன்னியாகுமரி, அனந்தபுரி, நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை, முத்துநகர், கொல்லம், குருவாயூர், செந்தூர் ஆகியவற்றில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்கனவே ஆர்ஏசி நிலை ஏற்பட்டுள்ளது.

பயணிகள், ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ரயில் முன்பதிவு மையங்கள் வழியாக டிக்கெட் பதிவு செய்யலாம். முன்பதிவின்போது ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகள் அவசியம் தேவைப்படும். புறப்படும் இடம், இலக்கு இடம், தேதி ஆகியவற்றைத் தேர்வு செய்து, ஆன்லைன் கட்டண முறைகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பதிவு செய்யலாம். கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறை காரணமாக டிசம்பர் 24, 25 தேதிகளுக்கான டிக்கெட்டுகளும் நாளை முதல் முன்பதிவிற்கு திறக்கப்படவுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!