சீனாவின் ஜிலின் மாகாணம், ஹன்சுன் பிராந்தியத்தில் இன்று காலை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. திடீரென ஏற்பட்ட அதிர்வால் பல கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்த மக்கள் பயந்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். சில நிமிடங்கள் நிலம் அதிர்ந்ததாக அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், மீட்பு மற்றும் அவசரகால பணியாளர்கள் அங்கு சென்றுள்ளதுடன், சேத மதிப்பீடு நடைபெற்று வருவதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!