திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்தடைய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் - ஜி.கே.வாசன்..!
Top Tamil News October 27, 2025 01:48 PM

சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவர் ஜி.கே வாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆயிரத்து 200 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு, ஆப்ரேஷன் சிந்தூர் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து திமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்தடைய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார். திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளுக்கும் இது வெற்றி முடிவாக இருக்கும் எனவும் ஜி.கே.வாசன் கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.