நவம்பர் மாதத்தில் வங்கிகள் சுமார் 9 முதல் 10 நாட்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1ஆம் தேதி பெங்களூரு கன்னட மாநில தினம், தெஹ்ராடூனில் Igas Baghwal கொண்டாட்டம் காரணமாக, வங்கிகள் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும்.
நவம்பர் 2ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
நவம்பர் 5ஆம் தேதி புதன்கிழமை நாடு முழுவதும் குருநானக் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனால் அன்றைய தினமும் வங்கிகள் செயல்படாது.
நவம்பர் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஷில்லாங பகுதிகளில் வாங்கலா திருவிழா கொண்டாடப்படுகிறது.இதனால், அன்றைய தினம் ஷில்லாங் பகுதியில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், நவம்பர் 7ஆம் தேதி சத் பூஜை கொண்டாடப்படுவதால் அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து, நவம்பர் 8ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதால், நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படுகிறது.
நவம்பர் 9,16,23ஆம் தேதிகளில் ஞாயிற்று கிழமை என்பதால் வங்கிகள் நாடு முழுவதும் மூடப்பட்டிருக்கும். அதே நேரத்தில், நவம்பர் 22ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
தமிழகத்தை பொறுத்தவரை, நவம்பர் மாதத்தில் பெரிய அளவில் எந்த பண்டிகைகளும் இல்லை. இதனால், சனி, ஞாயிறு கிழமைகளில் வழக்கம் போல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 7 நாட்கள் விடுமுறை வருகிறது. நவம்பர் 2,8,9,16,22,23,30ஆம் தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது.