சமீபத்தில், உணவு டெலிவரி செயலிகளை பயன்படுத்தும் நுகர்வோர்களை குறிவைத்து புதிய வகை ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. சலுகை கிடைத்துள்ளது என்று கூறி ஓடிபி கேட்பது, அல்லது தள்ளுபடி விலையில் உணவு கிடைக்கும் என தெரிவித்து பணம் பறிப்பது போன்ற முறைகள் அதிகரித்துள்ளன. சில நேரங்களில், உணவை ரத்து செய்துவிட்டு பணத்தை நேரடியாகப் பெறும் வகையிலும் மோசடிகள் நடைபெறுகின்றன.

மோசடியில் இழக்கும் தொகை குறைவாக இருந்தாலும், இதனால் செயலி மற்றும் உணவகங்கள் மீதான நம்பிக்கை பாதிக்கப்படுகிறது. உணவகங்களுக்கு உணவு நஷ்டமும், செயலிகளுக்கு சேவை கட்டண இழப்பும் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க, நுகர்வோர் சில எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.

உணவு ஆர்டர் செய்தபின் டெலிவரி ஏஜென்டின் க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்த வேண்டாம்; செயலி வாயிலாக மட்டுமே பணம் செலுத்த வேண்டும். ஆர்டர் ரத்து செய்யப்பட்டால், பின்னர் கொண்டு வரப்படும் உணவை வாங்குவதற்கு முன் உணவகத்துடன் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், டெலிவரி ஏஜென்ட் வற்புறுத்தினால் உடனே செயலியின் வாடிக்கையாளர் சேவையில் புகார் அளிக்கவும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!