ஆப்கானிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் போரைத் தொடங்குவோம் என பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இரு நாட்டு எல்லைப் பகுதியில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
இந்தப் பயங்கர மோதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அதேசமயம், பதிலடித் தாக்குதலில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்றதாலேயே இந்தக் கடுமையான மோதல் ஏற்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பாகிஸ்தானின் குர்ரம் மற்றும் வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டங்களுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தபோது இந்தச் சண்டை நிகழ்ந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.