``உங்களுக்கும் மணி சாருக்கும் இடையே இந்தி பாலமாகவும் நான் இருந்தேன்" - சுதா கொங்கராவின் பதிவு
Vikatan October 28, 2025 12:48 AM

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் `பராசக்தி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. பொங்கல் வெளியீட்டிற்காக படத்தின் வேலைகளையும் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

சுதா கொங்கரா

இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குநர் அனுராக் காஷ்யப்பை சந்தித்தது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் சுதா கொங்கரா.

அந்தப் பதிவில் அவர், "என் அன்பு நண்பரும், எழுத்தாளர்-திரைப்பட இயக்குநருமான அனுராக் காஷ்யப்பை கடைசியாக சந்தித்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன! 25 வருடங்களுக்கு முன்பு நாம் முதல் முறையாக சந்தித்த அந்த நாள் இன்றும் என் நினைவில் இருக்கிறது. மணி சார் உதவி இயக்குநராகவும், உங்களுக்கும் அவருக்கும் இடையே இந்தி பாலமாகவும் நான் இருந்தேன். சந்தித்த வெறும் நான்கு மணி நேரத்தில், “எப்போது உன் முதல் திரைப்படத்தை இயக்கப் போகிறாய்? அது ஒரு காதல் கதையா” எனக் கேட்டீர்கள்.

View this post on Instagram

A post shared by Sudha Kongara (@sudha_kongara)

மூன்று மணி நேரத்தில் என்னை முழுவதுமாக புரிந்து கொண்டுவிட்டீர்கள். நீங்கள் இருளின் மனிதராக இருந்தாலும், நான் ஒளிமயமானவளாக இருந்தாலும், நாம் என்றென்றும் நண்பர்களாக இருப்போம். எப்போது எனக்கு ஒரு காதல் கதையை எழுதி, கொடுக்கப் போகிறீர்கள், மிஸ்டர்?" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.