பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தராஜன் விடுத்துள்ள கண்டன செய்தியில், "விடுதலை சிறுத்தைகளின் இந்த பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
ஒடுக்கப்பட்ட மக்களை தொடர்ந்து ஏமாற்றி அவர்கள் எந்த விதத்திலும் முன்னேறி விடக்கூடாது என்பது தான் இந்த பேச்சின் சாரம்..
அதுவும் இந்த நாட்டை சுதேசி பாதையில் எடுத்துச் செல்வதற்காக அமெரிக்க தொழில்நுட்பத்திற்கே சவால் விட்டுக் கொண்டிருக்கும் மரியாதைக்குரிய பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு அவர்களை இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில்.. தமிழ்நாட்டைச் சார்ந்தவரை தரக்குறைவாக பேசியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர திருமாவளவன் அவர்கள் இத்தகைய தரம் கெட்ட வார்த்தைகளை அனுமதிக்கிறாரா.. அடங்கமறு அத்துமீறு திருப்பி அடி.. என்றுதான் இளைஞர்களை இவர்கள் பழக்கிக் கொண்டிருக்கிறார்கள்
.. திருந்தி படி என்றால் இவர்களுக்கு கோபம் வருகிறது.. ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.. இவர்களின் நோக்கம் இளைஞர்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துவது..
அவர்கள் முன்னேற ஆரம்பித்து விட்டால் இவர்களால் தாங்க முடியாது என்பதைத்தான் இவர்களது பேச்சும் செயலும் உணர்த்துகிறது.. 2026 இதற்கெல்லாம் பதில் சொல்லும்..." என்று தெரிவித்துள்ளார்.