ஏர் இந்தியா விமானத்தில் நடந்த “cockroach hanged to death” சம்பவம் சமீபத்தில் சமூக ஊடகங்களில் கிண்டலான விவாதமாக மாறியுள்ளது.
தொழில்நுட்பக் குறைபாடுகளை பதிவு செய்யும் லாக் புத்தகத்தில் பயணி ஒருவர் இருக்கையில் கரப்பான் பூச்சி இருப்பதாக புகார் கூறினார். அதை சரி செய்த ஊழியர் ஒருவர் அதை எப்படி சரியோ செய்தேன் என விளக்கம் கொடுத்து அதில் எழுதியுள்ளார் அதில், “அந்த கரப்பான் பூச்சி சாகும் வரை தூக்கில் போடப்பட்டது” என எழுதியுள்ளார்.
இது புகைப்படமாக இணையத்தில் பதிவு செய்யப்பட்டதைப் பார்த்த பயணிகள் மற்றும் இணைய பயனர்கள் அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டனர். இது தற்போது புகைப்படமாக இணையாயத்தில் பரவ,
சிலர் விமான நிறுவனம் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவனம் பற்றிய நம்பிக்கை முக்கியமானது என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவதாகவும், அதிகாரப்பூர்வ பதிவுகளில் நகைச்சுவை கலந்து எழுதுவது பொருத்தமற்றது எனவும் கூறி வருகின்றனர்.

இந்த “cockroach” சம்பவம் ஒரு சிறிய பதிவு எப்படி பெரும் இணைய கலாச்சாரப் பேச்சு பொருளாக மாற முடியும் என்பதற்கும், இதன் மூலம் அத்தியாவசிய பிரச்சனைகளை இணையவாசிகள் எப்படி தீர்க்க உதவுகிறார்கள் என்பதற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.